ஏப்ரல் 1 முதல் உயர்கிறது மின் கட்டணம்: எவ்வளவு தெரியுமா?
மும்பையில் மின்சார கட்டணத்தை உயர்த்த உள்ளதாக மின்சார தயாரிப்பு நிறுவனங்களான டாடா மற்றும் அதானி குழுமம் அறிவித்துள்ளன.
ஆம், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாடா நிறுவனம் ஒரு யூனிட்டிற்கு ரூ.1.10 வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதானி நிறுவனம் யூனிட்டிற்கு 25 பைசா வரை கட்டணத்தை உயர்த்த பரிந்துரைத்துள்ளது.
மும்பையின் தெற்கு பகுதி முழுவதும் மின் விநியோகம் செய்து வருகிறது டாடா நிறுவனம். இதே போல மும்பையின் புறநகரில் மின் விநியோகம் செய்து வரும் அதானி நிறுவனம் நிலக்கரியை கொண்டே இதனை செய்து வருகிறது. தற்போது உள்ள சூழலில் நிலக்கரி விலை அதிகரித்துள்ளதால் இந்நிறுவனங்கள் மின்கட்டணத்தை உயர்த்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
மேலும், மகாராஷ்டிரா மின்வாரியமும் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மின்கட்டண உயர்வை அமல்படுத்த தீர்மானித்துள்ளது என்பது கூடுதல் தகவல்.