புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 2 டிசம்பர் 2023 (16:49 IST)

விராட் கோலி உணவகத்தில் தமிழக இளைஞருக்கு அனுமதி மறுப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு சொந்தமான ஓட்டலில் தமிழக இளைஞருக்கு அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் சர்வதேசபோட்டிகள், ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதுடன், விளம்பரங்களிலும், ஓட்டல் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்த  நிலையில், விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் என்ற ஓட்டல்கள்  டெல்லி, புனே கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் இயங்கி வருகிறது.
 
ravana ram

இந்த நிலையில், மும்பை ஓட்டலில் வேஷ்டி, சட்டையில் சென்ற தமிழக இளைஞர் ராவண ராமுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நெட்டிசன்கள் இதுகுறித்து விமர்சனம் கூறி வருகின்றனர்.