வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (08:46 IST)

சுஷ்மா ஸ்வராஜூக்கு நன்றி சொன்ன அவரது கணவர்: ஏன் தெரியுமா?

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவரூமான சுஷ்மா ஸ்வராஜ், வரும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். இதனை அவர் முறைப்படி பாஜக மேலிடத்திலும் தெரிவித்துவிட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இருப்பினும் சுஷ்மாவின் இந்த முடிவுக்கு அவரது கணவர் ஸ்வராஜ் கவ்ஷல் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுஷ்மா மேடம் இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று அறிவித்துள்ளார். அவரது முடிவுக்கு மிக்க நன்றி. மில்கா சிங் கூட ஒரு கட்டத்தில் ஓடுவதை நிறுத்திக்கொண்டார் என்று பதிவு செய்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர், டெல்லி முதலமைச்சர் ஆகிய பொறுப்புகளில் இருந்த சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வெளிநாடு சென்றிருந்தபோது பொறுப்பு பிரதமராகவும் இரண்டு நாட்கள் பணிபுரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.