வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (12:42 IST)

அதிக வயது பெண்ணை திருமணம் செய்யும் சிறாரை தண்டிக்க கூடாது; உச்சநீதிமன்றம்

சிறார் திருமண (தடை) சட்டப்படி அதிக வயது பெண்ணை திருமணம் செய்த ஆண் சிறாரை தண்டிக்ககூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறார் திருமணத் தடை சட்டப்படி 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் சட்டம் அந்த ஆணை தண்டிக்கும்.
இந்நிலையில் 17 வயதுக்குட்பட்ட சிறுவன், 21 வயது பெண்ணை திருமணம் செய்ததற்காக பஞ்சாப் ஹரியானா மாநில உயர்நீதிமன்றம் 17 வயது சிறுவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து தண்டனை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பின்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுக்கு சென்றபோது, உச்ச நீதிமன்றம் பஞ்சாப் ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மறுத்துள்ளது. நம் சிறார் திருமண தடை சட்டப்படி நாம் 18 வயதிற்குட்பட்டவர் ஆணாக இருந்தாலும் அவருக்கு தண்டனை அளிக்கக்கூடாது என கூறியுள்ளது.