புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (20:14 IST)

”இதற்கெல்லாம் காங்கிரஸ் தான் காரணம்’..அமித் ஷா குற்றச்சாட்டு

டெல்லி பற்றி எரிவதற்கு காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தான் காரணம் என அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லியில் ஜாமியா மில்லியா  பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறைகளும் வெடித்தன. மேலும் டெல்லியில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றும் வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட அமித் ஷா, டெல்லி பற்றி எரிவதற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளே காரணம். அவர்கள் டெல்லி மக்களை தவறான பாதையில் கொண்டு செல்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.

மேலும், காங்கிரஸை சேர்ந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றிய தவறான புரிதலை சிறுபான்மையினரிடம் கொண்டு செல்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.