ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (22:43 IST)

தீர்ப்பு வருவதற்குள் ராமர் கோவில்: மீண்டும் சர்ச்சை கருத்தை கூறிய சுப்பிரமணியம்சாமி

ராமர் கோவில் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் தீர்ப்பு வருவதற்குள் ராமர் கோவிலின் கருவறை தவிர ஏனைய அனைத்து பகுதிகளையும் கட்டி முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், தீர்ப்பு வந்த பின் , கோவிலின் கருவறையை கட்ட உள்ளதாகவும் சுப்பிரமணியம்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
 
அயோத்தி விவகாரத்தில், சர்ச்சைக்கு உட்படாத 42 ஏக்கர் நிலத்தை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு,  மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் சர்ச்சைக்கு உட்படாத 42 ஏக்கர் நிலத்தை ஒருவேளை நீதிமன்றம் விடுவித்தால் என்ன நடக்கும் என்பது குறித்து சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். 
 
உள்துறை அமைச்சகத்துடன் கோவில் கட்டுவது தொடர்பாக விவாதம் செய்ததாகவும், ஆனால் முறையாக அனுமதி பெற்ற பிறகே கோவில் கட்ட மத்திய அரசு விரும்புவதாகவும் தெரிவித்த சுவாமி,  தீர்ப்பு வருவதற்குள் கருவறை தவிர மற்ற பகுதிகளை கட்டிவிட்டு, தீர்ப்புக்கு பிறகு, கோவிலின் கருவறையை கட்ட உள்ளதாகவும்  பதிவிட்டுள்ளார். சுப்பிரமணியம் சுவாமியின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.