டிக் டாக் விபரீதம் – பெண்களின் முகத்தை தவறாகப் பயன்படுத்திய மாணவன் !
பெண்களின் முகத்தைத் தவறாகப் பயன்படுத்தி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக டிக் டாக் செயலியில் வீடியோ எடுத்து போடுவது வெகுவாக பிரபலமாகி வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை டிக்டாக் வீடியோக்களுக்கு அடிமையாக உள்ளனர். ஆனால் இடம்பெறும் டிக்டாக்கில் உள்ள பெரும்பாலான வீடியோக்கள் சமூக பொறுப்பற்று ஆபாசமாகவே உள்ளன. இதில் பெண்களின் வீடியோக்களும் அடக்கம்.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சஹானி எனும் 12 ஆம் வகுப்பு மாணவன் இரு பெண்களின் முகத்தை மார்ப் செய்து தவறாக வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் போலிஸில் புகாரளிக்க மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் திருமணம் ஒன்றின் போது அந்த பெண்களைப் பார்த்து புகைப்படம் எடுத்ததாகக் கூறியுள்ளார்.