வயிற்றில் பெண் குழந்தையா?.. தலாக் சொன்ன கணவன்
மனைவி வயிற்றில் பெண் குழந்தை என தெரிந்த பின்பு கணவன் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்த சம்பவம் நடந்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த ஃபர்ஸானா என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கலிப் என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது கர்பமாகியுள்ளதை தொடர்ந்து, தனது மனைவியை மருத்துவ பரிசோதனை செய்யுமாறு வற்புறுத்தினார்.
அதில் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்தது. இதனால் கோபமடைந்த கலிப், தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல் துறையில் புகார் அளித்தார் ஃபர்ஸ்னா. அப்புகாரின் அடிப்படையில் கலிப் மற்றும் அவரது தாயார் உட்பட அவரது குடும்பத்தினர் 10 பேரின் மீதும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.