புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (13:48 IST)

பொய் செய்தி வெளியிட்டால்...பத்திரிகைகளுக்கு மத்திய அரசின் அதிரடி நிபந்தனை

பத்திரிகைகளில் பொய்ச்செய்தி அதிகளவில் வெளியாவதாகவும், இந்த செய்திகள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவதாகவும் அதிகளவில் புகார் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதற்கு செக் வைக்கும் வகையில் மத்திய அரசு புதிய நடைமுறை ஒன்றை விரைவில் அமலுக்கு கொண்டு வரவுள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறிய மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, 'தவறான, பொய்யான செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் தடை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ஒரு பத்திரிகையாளர் தவறான செய்தி பதிவு செய்வதாக குற்றம் சாட்டப்பட்டால், அந்த செய்தி குறித்து  இந்திய பத்திரிகையாளர்கள் கவுன்சில் மற்றும் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் ஆகியவை அந்த செய்தி தவறு என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தவறான செய்தி என்று ஒரு முறை உறுதி செய்யப்பட்டால் அந்த பத்திரிகையாளரின் அங்கீகாரம் 6 மாத காலம் ரத்து செய்யப்படும் என்றும் இதுவே இரண்டாவது முறையும் இதே போன்ற தவறு நடந்தால் ஒரு வருடம் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், மூன்றாவது முறையும் அதே தவறு நடந்தால், நிரந்தரமாகப் பத்திரிகையாளரின் அங்கீகாரம் தடைசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.