கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் சித்தராமையா தர்ணா

sidh
Last Updated: வியாழன், 17 மே 2018 (12:59 IST)
பெரும்பான்மை இல்லாத பாஜக வை சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகா சட்டசபை வளாகத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், கர்நாடகாவின் 23வது முதல்ராக எடியூரப்பா பதவியேற்றார்.
kar
இதனையடுத்து பாஜகவின் இந்த செயல் ஜனநாயகப் படுகொலை என்றும் இது ஜனநாயகத்தின் கருப்பு நாள் என்றும்  ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் இந்த வெற்று வெற்றியை பாஜக கொண்டாட வேண்டாம் எனவும், இதுவே இறுதி முடிவு அல்ல எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தின் முன்பு கர்நாடக முன்னாள் முதலமைச்ச்ர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல் என்றும் பாஜகவின் இந்த கீழ்த்தரமான செயலை மக்களிடத்தில் எடுத்து கூறுவோம் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
thar
ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள அமைச்சர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :