தொடர்ச்சியாக 3வது நாளாக சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் கலக்கம்!
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று மற்றும் நேற்று முன்தினம் சரிந்த நிலையில் இன்று 3வது நாளாக சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரத்தில் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் சென்செக்ஸ் ஏற்றத்தில் இருந்தது என்பதும் அதன் பின்னர் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சரிவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 330 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 175 புள்ளிகள் சரிந்து 17700 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தொடர்ச்சியாக மூன்றாவது நாள் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் வரும் நாட்களில் மீண்டும் பங்குச் சந்தை வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்