செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2019 (13:57 IST)

”கட்சியிலிருந்து ராஜினாமா செய்தால் பல கோடி ரூபாய் பணம்”.. கர்நாடக எம்.எல்.ஏ க்கு பேசப்பட்ட பேரம்

கட்சியிலிருந்து ராஜினாமா செய்தால் தனக்கு பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவின் காங்கிரஸ்-மஜத கூட்டணியிலிருந்து 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அக்கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது என குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் எம்.எல்.ஏ. சாரா மகேஷ், கட்சியிலிருந்து ராஜினாமா செய்தால் தனக்கு ரூ.28 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டது என கூறியுள்ளார். இதற்கு முன் பாஜக, காங்கிரஸ்-மஜத கூட்டணியை கவிழ்க்க சதி செய்து வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது மஜத எம்.எல்.ஏக்கு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.