வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (15:57 IST)

நான் அரசியலுக்கு வரவேண்டுமென நெல்சன் மண்டேலா விரும்பினார்- ப்ரியங்கா காந்தி உருக்கமான ட்வீட்

தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்தநாள் உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நெல்சன் மண்டேலா தன்னிடம் கூறிய விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ப்ரியங்கா காந்தி.

தென் ஆப்பிரிக்காவின் விடுதலைக்காக ஓயாமல் குரல் கொடுத்து 26 வருடங்களை சிறையில் கழித்து தன் வாழ்க்கையையே கொடுத்து மக்களை மீட்டவர் முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா. ராஜீவ் காந்திக்கும் நெல்சன் மண்டேலாவுக்குமே நல்ல சிநேகிதம் உண்டு. ராகுலும், பிரியங்காவும் நெல்சன் மண்டேலாவை மாமா என்றுதான் அழைப்பார்களாம்.

இன்று நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்தநாள். அதையொட்டி ட்விட்டரில் நெல்சன் மண்டேலாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ப்ரியங்கா காந்தி “இந்த உலகத்திற்கு முன்பை விட இப்போதுதான் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அதிகமாக தேவை. உண்மை, அன்பு மற்றும் சுதந்திரத்துக்கான முன்மாதிரி அவர்.

எனக்கு அவர் நெல்சன் மாமா (நான் அரசியலுக்கு வந்தால் மற்றவர்களைவிட சிறப்பாக ஏதாவது செய்வேன் என்று நம்பியவர்) அவர் எப்போதுமே எனக்கு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.