1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (15:42 IST)

மனுதாரர் வீட்டிலிருந்தே விசாரணைகளை லைவ் பார்க்கலாம்; உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

உச்ச நீதிமன்ற விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

 
அரசியல் சாசனம் மற்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரான் இந்திரா ஜெய்சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம். இதுகுறித்து திபக் மிஸ்ரா கூறுகையில், தனது தரப்பு வழக்கறிஞர் எப்படி வாதாடுகிறார் என்பதை மனுதாரர் வீட்டில் இருந்தபடியே பார்க்க இது உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக பார் சங்கத்தின் பரிந்துரையையும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் இதுகுறித்து விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.