திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஜூலை 2018 (11:36 IST)

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கலாம் - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

இந்தியாவில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெக்டே கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்தியாவில் விபச்சாரம், சூதாட்ட போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவை இரண்டும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடத்துவதை அரசால் தடுக்க முடியவில்லை. எனவே, விளையாட்டை வைத்து நடத்தும் சூதாட்டங்களை சட்டபூர்வமாக்கலாம் என சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தன் மூலம் அரசுக்கு வருவாயு கிடைக்கும் எனவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி என். சந்தோஷ் ஹெக்டே “சூதாட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ள யோசனையை வரவேற்கிறேன். இது அல்ல யோசனை. ஏனெனில், எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் சூதாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சட்டபூர்வமாக்கும் போது சட்டவிரோத செயல்கள் நின்றுவிடும். 
 
அதேபோல், விபச்சாரத்தையும் சட்ட பூர்வமக்கலாம் என்பது என் கருத்து. விபச்சாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே, அதையும் சட்டபூர்வமாக்கினால் அந்த தொழிலில் உள்ளவர்களுக்கு வருவாய் கிடைக்கும். விபசார தொழிலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்” என பேசினார்.
 
இவரின் கருத்து தேசிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.