1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (21:44 IST)

வித்தியாசமான முறையில் திருடிய கொள்ளையர்கள் கைது !

theft
மத்திய பிரதேச மாநிலத்தில் கொள்ளையர்கள் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மத்திய பிரதேச மா நிலம் போபால் நகரில் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது.

இந்தக் கொள்ளை சம்பவத்தை அடுத்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 12க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இவர்கள்  கொள்ளையடித்த ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளையர்கள் சம்பவத்தின் போது, செருப்புகளை கைகளில் கொண்டு சென்றுள்ளனர். செருப்பு அணிந்தால், நாய்களுக்கும், மக்களுக்கும் சத்தம் கேட்கும் என்பதால், இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.

Edited By Sinoj