வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 மே 2019 (08:03 IST)

2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பா? பரவும் வதந்தியால் பரபரப்பு

பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி திடீரென ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அரசுக்கு எதிர்பார்த்த நன்மை வரவில்லை என்றாலும் ஏராளமான போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் ரூ.2000 நோட்டை வெளியிட்டதால் மீண்டும் கருப்புப்பணம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதனையடுத்து மீண்டும் பிரதமராகவுள்ள மோடி ரூ.2000 நோட்டை மதிப்பிழக்க செய்யும் அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து ரூ.2000 நோட்டை அதிகளவில் பதுக்கி வைத்தவர்கள் தற்போது அந்த நோட்டை புழக்கத்திற்கு விட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ரூ.2000 நோட்டு தற்போது அதிகமாக புழங்கப்படுவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருகின்றன
 
ஆனால் மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்னும் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு இருக்காது என்றும், வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ஒருபிரிவினர் கூறி வருகின்றனர். அப்படியே இப்படி ஒரு அறிவிப்பு வந்தாலும் ஏழை எளியவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றே கூறப்படுகிறது