வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (16:49 IST)

அர்னால்ட் இல்லாத டெர்மினேட்டரா? கடுப்பான ரசிகர்கள்

ஹாலிவுட் படங்களில் உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட படங்களில் முக்கியமான படம் டெர்மினேட்டர்.

1984ல் அர்னால்ட் நடித்து வெளியான இந்த படம் உலகெங்கும் பல ரசிகர்களையும், அதிக வசூலையும் அள்ளி குவித்தது. அவதார், டைட்டானிக் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன்தான் இந்த படத்தையும் இயக்கியிருந்தார். டெர்மினேட்டரின் வெற்றிக்கு பிறகு 1991ம் ஆண்டு அதன் இரண்டாம் பாகமான “டெர்மினேட்டர் : ஜட்ஜ்மெண்ட் டே” வெளியானது. இதையும் கேமரூனே இயக்கியிருந்தார். இதுவும் பல கோடி வசூலை குவித்தது.

அதற்கு பிறகு வெளியான டெர்மினேட்டர் பாகங்களை கேமரூன் இயக்கவில்லை. டெர்மினேட்டர் சால்வேஷன், ஜெனிசிஸ் போன்றவை அவ்வளவு பெரிய வசூல் இல்லை என்றாலும் அர்னால்டை பார்ப்பதற்காகவே ஒரு பெரிய கூட்டம் கூடியது.

இந்நிலையில் டெர்மினேட்டர் படத்தொடரின் அடுத்த பாகமாக எடுக்கப்பட்டுள்ள “டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்” திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அர்னால்ட் இல்லாததை கண்டு செம கடுப்பில் உள்ளனர். அர்னால்ட் ஒரு சிரிய கௌரவ தோற்றத்தில் மட்டுமே இந்த படத்தில் வருகிறார். வயது முதிர்ச்சியின் காரணமாக அர்னால்ட் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.