திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜூலை 2019 (14:20 IST)

கோவிந்தாவை தரிசிக்க வந்த ”கோவிந்த்”!!..திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த ஜனாதிபதி

ஆந்திர மாநிலம், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில், இன்று காலை தரிசனம் செய்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

நேற்று காஞ்சிபுரம், அத்திவரதரை தரிசனம் செய்த பின், சென்னை சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி பங்கேற்றார். அதன் பின்பு இன்று காலை திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் தரிசனம் செய்தார்.

இன்று மாலை திருப்பதி திருமலையில் நடைபெறும் ஆர்ஜித் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை ஸ்ரீஹரிஹோட்டவில் விண்ணிற்கு ஏவப்படும், சந்திராயன் 2 விண்கலத்தையும் பார்வையிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.