வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2019 (16:37 IST)

அமர்நாத் பனிக்குகையில் 5 நாட்களில் இத்துணை பேர் தரிசனமா?

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் ஆண்டு தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்கதர்கள் புனித யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வருடம் பக்தர்கள் பலகட்டமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு  குழுவாக அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் ஒவ்வொருவருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருவது போலவெ இந்த வருடமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை தந்துள்ளனர்.
 
குறிப்பாக கடந்த ஐந்து நாட்களில் 60 ஆயிரத்துக்கு 228  யாத்திரிகர்கள் அங்குள்ள குகைக்கோவிலில் வழிபாடு செய்துள்ளதாக மாநில்  ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் புனித யாத்திரைக்காக சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 
காஷ்மீர் மாநிலத்தில்  மாநில அரசு ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது, ஜனாதிபதி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.