அம்மாடி..15 ராஜநாகத்தை கையில் பிடித்த இளைஞர் ...வைரலாகும் வீடியோ

kerala
Last Modified செவ்வாய், 25 ஜூன் 2019 (20:25 IST)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷு என்பவர், கொல்லம் தேயிலைத் தோட்டத்தில் சுற்றித்திரிந்த 15 அடி ராஜ நாகத்தை கையில் பிடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வாவா சுரேஷ்(45). இவர் அந்த மாநிலத்தில் உள்ள மிகச்சிறந்த பாம்பு பிடிப்பாளி ஆவார். அதனால் கேரளாவில் எதாவது விஷப் பாம்புகள் புகுந்துவிட்டால் சுரேஷை தான் கூப்பிடுவார்கள். அந்த அளவுக்கு சுரேஷ் அம்மாநிலத்தில் பிரபலம்.
 
இந்நிலையில் கொல்லம் எஸ்டேட்டில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த ராஜநாகத்தை சுரேஷ் பிடித்துள்ளார். அந்த ராஜநாகம் சுமார் 15 அடி நீளம் ஆகும். தற்போது சுரேஷ் பிடித்துள்ளது அவரது பாம்பு பிடி எண்ணிக்கையில்  165 ஆவது பாம்பு ஆகும்.
 
தற்போது சுரேஷ் பாம்பு பிடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :