ஆதார் அடிப்படையில் வருகை பதிவு: ஊழியர்களுக்கு ஷாக் கொடுக்கும் ரயில்வே!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 6 நவம்பர் 2017 (18:33 IST)
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் வருகை பதிவு இனி ஆதார் அடிப்படையில் கணக்கெடுக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. 

 
 
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்கு தாமதமாக வராமல் தடுக்கவும், உரிய நேரத்துக்கு வருவதற்காகவும் ஆதார் அடிப்படையிலான வருகைப்பதிவு முறையை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
 
இந்திய ரயில்வே துறையில் நிர்வாக சீர்கேடுகள் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இதை தடுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது ரயில்வே.  இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் ஆதார் அடிப்படையிலான வருகை பதிவு முறை நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :