சற்று தாமத்திருந்தால்?..ரயிலில் சிக்கிய 7வயது சிறுவன் : அதிர்ச்சி வீடியோ

Last Modified திங்கள், 5 பிப்ரவரி 2018 (16:30 IST)
நகரும் ரயிலில் சிக்கவிருந்த சிறுவன் காவலர் ஒருவரால் காப்பாற்றப்பட்ட வீடியோ இணையதளத்தில் வலம் வருகிறது.

 
கடந்த 2ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நய்கவுன் ரயில் நிலையத்திற்கு ஒரு பெண்ணும் , அவரது 7 வயது மகனும் வந்தனர். அப்போது, கிளம்ப தயாராக இருந்த ரயிலில் அந்த தாய் ஏறிவிட்டார். ஆனால், சிறுவன் ஏறுவதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. இதனால், நிலை தடுமாறிய சிறுவன் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டான்.
 
இதைக் கவனித்த ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு, அங்கிருந்த மற்றவர்களின் உதவியோடு சிறுவனை தூக்கி காப்பாற்றி விட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
தக்க நேரத்தில் செயல்பட்ட ரயில்வே காவலரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :