வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜனவரி 2018 (15:15 IST)

பாலமேடு ஜல்லிகட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலி

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவரை ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. நேற்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று மதுரை பாலமேட்டில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் 1,002 காளைகளும், 1,188 மாடுபிடி வீர்ர்களும் பங்கேற்கின்றனர்.
 
இதுவரை 400 மாடுகள் களமிறங்கிய நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் சானார்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்ற இளைஞர், மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 23 விரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.