Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் ஜிலேபி, பஜ்ஜியை வெளுத்து வாங்கிய ராகுல்!!


Sugapriya Prakash| Last Updated: ஞாயிறு, 12 நவம்பர் 2017 (11:55 IST)
குஜராத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி அங்கு ரோட்டு கடையில் ஜிலேபி பஜ்ஜியை சுவைத்துள்ளார். 

 
 
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் 9 ஆம் தேதியும் மற்றும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 
 
இதன் காரணமாகவே மத்திய அரசு ஜிஎஸ்டி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது என கூறப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுக்கு ஈடாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
 
உத்தரப்பிரதேச தேர்தலை போன்று இல்லாமல் குஜராத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். 
 
பிரசாரத்தின் போது சற்று ஓய்வு எடுக்க பக்கத்தில் இருந்த ரோட்டோர கடையில் ஜிலேபி, பஜ்ஜி, ஃபாப்டா ஆகியவற்றை சுவைத்துள்ளார்.
 
அப்போது அங்கு அவரிடம் குறை கூற வந்தவருக்கும் பஜ்ஜியை கொடுத்து குறைகளை கேட்டறிந்தாராம்.


இதில் மேலும் படிக்கவும் :