வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (08:19 IST)

மகன் கார் விபத்து குறித்து வானதி சீனுவாசன் பதிவு செய்த டுவிட்!

பாஜக பிரபலம் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மூத்தமகன் ஆதர்ஷ் நேற்று கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தனது மகன் கார் விபத்து குறித்து வானதி சீனிவாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். எனது மூத்த மகன் ஆதர்ஷ் ஓட்டி வந்த வாகனம் நேற்றிரவு எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இறைவன் அருளால் எந்தவித காயங்களும் இல்லாமல் அவர் நலமாக உள்ளார். அக்கறையோடு அன்போடு விசாரித்தார் நல் உள்ளங்களுக்கு நன்றி. என தெரிவித்துள்ளார்
 
வானதி சீனிவாசன் மகன் நேற்று கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவருக்கு சிறு சிராய்ப்புகள் மட்டுமே இருந்ததாகவும், அதனையடுத்து அவர் முதலுதவி மட்டும் எடுத்துக் கொண்டு அவர் வீடு திரும்பினார் என்றும் கூறப்படுகிறது