வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 மே 2019 (18:16 IST)

ராகுல் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம்: பிசுபிசுத்ததா 3வது அணி?

ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. ஒருசில மணி நேரத்தில் கிட்டத்தட்ட யார் அடுத்த ஆட்சியை அமைக்கவுள்ளனர் என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிடும்
 
 இந்த நிலையில் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் மே 21ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டுகிறார். டெல்லியில் நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி உள்பட ஒருசில முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து மூன்றாவது அணி ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
ஒருபக்கம் மூன்றாவது அணி அமைக்க தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் ராகுல்காந்தி- சந்திரபாபு நாயுடு சந்திப்புக்கு பின் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளதால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து மு.க.ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.