டுவிட்டரில் இணைந்தார் பிரியங்கா காந்தி! சில மணி நேரத்தில் குவிந்த ஃபாலோயர்கள்

Last Modified திங்கள், 11 பிப்ரவரி 2019 (13:34 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் டுவிட்டர் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டும், டுவிட்டர் தளத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி கொண்டும் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தீவிர அரசியலில் குதித்த பிரியங்கா காந்தி இன்று டுவிட்டரில் இணைந்துள்ளார்.

@priyankagandhi என்ற முகவரியில் டுவிட்டரில் இணைந்த பிரியங்கா காந்தியை ஒருசில மணி நேரத்தில் 37 ஆயிரம் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். இன்னும் ஃபாலோயர்கள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகி கொண்டே வருவதால் இன்று இரவுக்குள் ஒரு லட்சம் ஃபாலோயர்கள் கிடைக்கும் என காங்கிரஸார் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் வரும் 2022ஆம் ஆண்டு உபி சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதால் இப்போது முதலே டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரை பிரபலமாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :