வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (22:30 IST)

காங்கிரசுக்கு இந்து மதம் மீது நம்பிக்கை உண்டு: கே.எஸ்.அழகிரி

ஒருபக்கம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்து மத திருமணங்கள் குறித்தும், இந்து மதத்தினர் பெரிதும் மதிக்கும் சங்கீத வித்வான்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சிக்கு இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை உண்டு என கூறியுள்ளது.
 
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அறிவிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி இன்று அந்த பொருப்பை முறைப்படி ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'காங்கிரசுக்கு இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை உண்டு; ஆனால் மற்றவர்களிடம் திணிப்பதில்லை என்றும், பிரதமர் மோடிபோல் ஆயிரம் பேர் வந்தாலும் காங்கிரஸ் கொள்கைகளை அசைக்க முடியாது என்றும் கூறினார்.
 
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்றால் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், மதச்சார்பற்ற அணி மத்தியில் வர வேண்டும் என்பது தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
 
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி மோதல் இல்லை என்றும், கருத்து வேறுபாடுதான் இருக்கிறது என்றும், காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது என்றும், கட்சியில், பதவி யாருக்கும் நிரந்திரம் இல்லை என்றும் கூறினார். மேலும் சிறுபான்மையினருக்கு அச்சம், ஜிஎஸ்டி பாதிப்பு என நாடு பல பிரச்னையில் இருக்கிறது என்றும், பிரதமராக ராகுல் காந்தி வந்த பின்னர் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.