வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (14:49 IST)

அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வு- காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

Mallikarjun Kharge
நாடு முழுவதும் அத்தியாசிய பொருட்களில் விலை உயர்ந்து வருவதாகக் கூறி மத்திய அரசை  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், வளர்ந்த இந்தியா என்ற  பெயரில் மத்திய அரசு யாத்திரை  நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில்,  கொள்ளையடிப்பதில் பாஜக தேர்ச்சி அடைந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தளத்தில், பணவீக்கம் என்ன மாதிரியான வளர்ந்த இந்தியா இது? கொள்ளையடிப்பதில் பாஜக தேர்ச்சி அடைந்துள்ளது என்று பதிவிட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்த தக்காளி, சர்க்கரை,பால், வெங்காயம் ஆகியவற்றின் தற்போதைய விலையை ஒப்பிட்டு வீடியோ பதிவிட்டுள்ளார்.