திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (13:39 IST)

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: 7 பேர் பணியிடை நீக்கம்

Parliamentary
மக்களவைக்குள் இன்று அத்துமீறி நுழைந்த இருவரால்  பெரும் பரபரப்பு ஏற்பட் நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற அதே தினமான  நேற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த இருவர் அண்ண புகை குச்சிகளை கையில் ஏந்தி  சபா நாயகரை நோக்கிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துமீறி நுழைந்த இருவரை அவையில் இருந்த எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர்.

மக்களவையில் இரண்டுபேர் அத்துமூறி  நுழைந்த நிலையில். நீலம், அன்மோல்ஷிண்டே ஆகிய இரண்டு பெண்களை டெல்லி காவல்துறையினர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் மேலும் 2 ஆண்களை கைது செய்துள்ளதாக கூறப்பட்டது.

மக்களவையில் புகைக் குப்பி வீசப்பட்ட இடத்தில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவை பாதுகாப்பு குறைபாடு காரணமாக 7 பேர் பணியிடை நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை பாதுகாப்பில் குளறுபடி தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடாளுமன்றம் கூடுதல் பாதுகாப்புடன் மீண்டும் கூடி நடந்து வருகிறது.

இன்றைய கூட்டத்தொடரின்போது, பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு உறுப்பினர்கள் அவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.