வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (14:16 IST)

ஸ்ரீதேவியின் மரணத்தையும் விட்டுவைக்காத அரசியல் தலைவர்கள்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் இந்திய திரையுலகையே அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவரது மரணத்தை கூட அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதாயமாக பயன்படுத்தி கொள்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் தளத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு UPA  அரசின்போது தான் ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பத்மவிருதுகள் அரசியலை தாண்டி இந்தியாவின் உயர்ந்த விருதுகளாக கருதப்படும் நிலையில் தங்களுடைய ஆட்சியில் கொடுக்கப்பட்ட விருது என்று காங்கிரஸ் விளம்பரப்படுத்தியுள்ளது. பின்னர் நெட்டிசன்களின் கண்டனம் காரணமாக அந்த டுவீட் டெலிட் செய்யப்பட்டது.

அதேபோல் ஸ்ரீதேவி இந்தி சினிமாவில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், 'இந்தி திரையுலகிற்கு ஸ்ரீதேவி மறக்க முடியாத பல நினைவுகளை விட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார். இந்த டுவீட்டுக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன