ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 நவம்பர் 2018 (15:19 IST)

10,000 ஏக்கரில் கஞ்சா தோட்டம்: பொறி வைத்து பிடித்த போலீஸ்; எங்கே தெரியுமா?

ஆந்திராவில் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டத்தை போலீஸார் ட்ரோன் கேமரா மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
இளைஞர்கள் மத்தியில் கஞ்சா உபயோகிக்கும் பழக்கம் இப்பொழுது அதிகரித்து விட்டது. கஞ்சாவில் அதிக லாபம் கிடைப்பதால் பலர் இந்த கஞ்சா விற்கும் தொழிலை செய்து வருகின்றனர். பலர் இதனை பயிரிட்டும் வளர்க்கிறார்கள்.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பது போலீஸாரின் கவனத்திற்கு வந்தது. இதுகுறித்து அறிய போலீஸார் அந்த பகுதிகளை ட்ரோன் கேமரா மூலம் பார்வையிட்டனர். இதில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டட்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.
 
இந்த இடத்திலிருந்து தான் நாடு முழுவதும் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது. இந்த கஞ்சா தோட்டங்களை அடியோடு அழிக்க ஆந்திர போலீஸார் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.