வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (12:38 IST)

லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா பல்டி: போலீஸுக்கு ஆதரவாக வாக்குமூலம்

ஜல்லிக்கட்டு போரட்டம் தொடர்பான விசாரணையில் நடிகர்கள் லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா போலீஸுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடந்த 2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. என்னென்னவோ செய்தும் போராட்டத்தைக் கலைக்க வழியில்லாத அரசு, கடைசியில் காவல்துறையை ஏவி தடியடி நடத்தி கலைத்தது. இதனால், பயங்கர வன்முறை வெடித்தது.
இதுகுறித்து விசாரிக்க நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற சென்னை, திருச்சி, மதுரை, கோவை பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ராஜேஷ்வரன் விசாரணை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் ஜல்லிக்கட்டு விசாரணையை நடத்தி வரும் ராஜேஸ்வரன் பேசுகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக இதுவரை 1952 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 150 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 
 
இந்த போராட்டத்தில் முக்கிய பங்கை வகித்த நடிகர்கள் லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா போலீஸுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர் என கூறியுள்ளார். மேலும் இந்த விசாரணையின் காலக்கெடுவை 6 மாதம் நீட்டிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.