வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (20:25 IST)

டெல்லியில் பெண்ணைத் தாக்கிய நபர் கைது

ஒரு இளம் பெண்ணை, ரோஹித் கொடூரமான முறையில் அவனது நண்பர்கள் முன்னிலையில் வைத்து தாக்குதல் நடத்துவது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி  வைரல் ஆகியிருந்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பார்வையிலும் அந்த வீடியோ காட்சி பட்டதால் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என டெல்லி காவல் துறையினருக்கு  அவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த வீடியோவில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் நேற்று காவல் நிலையம் சென்று ஒரு அறிக்கையை அளித்துள்ளார். ’ரோஹித் அவனுடைய நண்பரின் அலுவலகத்திற்கு என்னை வரும்படி அழைத்தான். அங்கு நான் சென்றதும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் என்னை பலமாகஅடித்து துன்புறுத்தினான். போலீஸிடம் செல்வேன் என்று கூறிய போது ,விடாமல் தாக்கி ,அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பயமுறுத்தி மிகக் கொடூரமாக தாக்கினான்’ என்று அந்த பெண் அதில் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணைத் தாக்கிய  குற்றவாளி ரோஹித் சிங் தோமர் என்பவனை போலீஸார் நேற்றிரவில் கைது செய்தனர்.கடந்த மாதம் வரை  டெல்லியில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்து வந்த அவன் தற்போது  வேலையின்றி  சுற்றி திரிந்திருக்கிறான். அப்போதுதான்  இந்த குற்ற சம்பவம் நடந்து இருக்கிறது.

மேலும் அந்த கால் சென்டரின் உரிமையாளர் அலி ஹசன் மற்றும் அவனுக்கு உதவி செய்து வந்ததாக   ஒருவனையும்   போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

ரோஹித்துக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்த நிலையில் நிச்சயிக்கப்பட்ட பெண் தானாக முன் வந்து  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் ரோஹித்துக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தது மட்டுமல்லாமல்  நடக்க இருந்த திருமணத்தை  நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.