1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 செப்டம்பர் 2018 (14:48 IST)

சும்மா இருப்பேன்னு நினைக்காதீங்க... பாஜகவிற்கு வார்னிங் கொடுத்த குமாரசாமி

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரரும் உள்ளார். 
 
இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள உட்பூசல் காரணமாக வைத்து ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இது குறித்து குமாரசாமி பின்வருமாறு பேசியுள்ளார்.
 
எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சியின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.
 
எனது ஆட்சியை கலைக்க முயற்சி செய்து வருகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் தயாராகி வருகிறேன். 
 
எனது கூட்டணி ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் செய்கிறேன். நான் ஒன்றும் அமைதியாக உட்கார்ந்து இருக்கமாட்டேன் என கூறியுள்ளார்.