செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (10:24 IST)

க்ரேட்டா தன்பெர்க் வாசகங்களை மாற்றி வெளியிட்ட மாணவி! – பெங்களூரில் கைது!

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து க்ரேட்டா தன்பெர்கின் வாசகங்களை திருத்தி வெளியிட்ட கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக க்ரேட்டா தன்பெர்க், ரிஹானா உள்ளிட்டோர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவி திஷா ரவி என்பவர் க்ரேட்டா தன்பெர்கின் கருத்துகளை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம் போலீஸார் திஷா ரவி வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.