நெருங்கி வரும் தேர்தல்; விலை குறைந்தது பெட்ரோல்!
இந்தியாவில் பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டிவிட்ட நிலையில் தேர்தலுக்காக விலை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் இந்திய அரசின் மதிப்பு கூட்டு வரிகளால் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90 ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் மேற்கு வங்கம், அசாம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தேர்தலை சந்திக்க உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல் மீதான விலையேற்றத்தை குறைத்துள்ளது அசாம் அரசு. அதன்படி அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டு ரூ.85.41 க்கு விற்பனையாகி வருகிறது. அசாம் போல மற்ற மாநிலங்களும் பெட்ரோல் விலையில் விலைகுறைப்பு அறிவிக்குமா என பலர் எதிர்பார்த்திருப்பதாக தெரிகிறது.