வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:19 IST)

அமித்ஷாவுடன் அருண் ஜெட்லி வீட்டிற்கு விரைந்த மோடி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் பிரதமர் மோடி. 
 
கடந்த சனிக்கிழமை உடல்நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்த அருண் ஜெட்லி காலமானார். இவரது இறுதி அஞ்சலியின் போது பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. எனவே தற்போது தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அவர் அருண் ஜெட்லியின் வீட்டிற்கு சென்றுள்ளார். 
 
அருண் ஜெட்லியின் மனைவி, மகன், மகள் ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பிரதமர் மோடியுடம் அமித்ஷாவும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பஹ்ரைனில் நடந்த பொது நிகழ்ச்சியிலும் அருண் ஜெட்லி மறைவு குறித்து மோடி, நான் இவ்வளவு தொலைவில் இருக்கும் இந்நேரத்தில் எனது நண்பர் அருண், இயற்கை எய்திவிட்டார் என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.