புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:41 IST)

என் சகோதர, சகோதரிகளே! – தமிழில் வாழ்த்து சொன்ன பிரதமர்!

தமிழ் புத்தாண்டு தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளர்.

கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையின் இன்று சித்திரை முதல் நாள் தமிழ் வருட பிறப்பாக தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் சிக்கனமான முறையில் வீடுகளில் தமிழ் வருட பிறப்பை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி “அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்.” என்று தமிழிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார்.