திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (10:23 IST)

கடைசி பந்தில் சிக்சர் அடிப்போம்: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து

PM Modi
நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்போம் என்றும் பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக நேற்று டெல்லியில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி  நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை வந்து வந்ததை நமக்கான வாய்ப்பாக கருத வேண்டும். நாம் கடைசி நேரத்தில் சிக்சர் அடித்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிப்போம். 
 
ஊழல் இல்லாத இந்தியா, வாரிசு இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நமது லட்சியம். இதற்கு நேர் மாறாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆணவப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். வாக்கு அரசியல்ம் ஊழல் அரசியல்ம் வாரிசு அரசியலில் ஈடுபடும் அவர்களால் சமூக நீதிக்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
Edited by Mahendran