1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (17:45 IST)

அதிமுக மதுரை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு? ஈபிஎஸ் ஆலோசனை..!

மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவின் மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைக்க எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.  
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு தென் மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்று கூறப்படும் நிலையில் அதை பொய்ப்பிக்கும் வகையில் தான் மதுரையில் மாநாடு நடத்தப்படுகிறது. 
 
அதிமுக பொதுச்செயலாளர் பதவியேற்ற பின் தென் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் பிரமாண்டமான மாநாடு நடைபெற உள்ளது. 
இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை அழைக்கலாமா என்று ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அதிமுக நிர்வாகிகள் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  
 
முழுக்க முழுக்க அதிமுகவினர் நடத்தும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran