திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2020 (15:10 IST)

AIRTEL, BSNL - வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்... நிறுவனங்கள் அதிரடி !!

கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் ஸ்தபித்துள்ளது. இந்தியாவில், ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவுவதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து ஏர்டெல் தலைமை அதிகாரி சஷ்வந்த் சர்மா கூறியதாவது, கொரோனாவால் வருமானம் இலலாமல் தவித்துவரும் மக்களுக்கும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவும் வகயைில், 8 கோடி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ப்ரீபெய்டு பேக் முடவடைகின்ற  காலத்தை வரும்  ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்  இன்கம்மிங் கால்  அழைப்புகளை தடையின்றி அவர்கள் பெறமுடியும் என் என தெரிவித்துள்ளது.

இதில்,, ப்ரிபெய்டு வாடிக்கையாளர் எண்களுக்கு 10 ரூபாய் டாக் டைம் வழங்கப்படுவதாகவும்,  இதனை அவசர அழைப்புகள், குறுஞ்செய்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

அதேபோல் மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கையாளர்களுக்கு  உதவும் வகையில், ப்ரீ பெய்டு காலத்தை வரும் ஏப்ரல் 20 ஆம்தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும்  அதன் வாடிக்கையாளர்களின் எண்களுக்கு 10 ரூபாய் டாக்டைம் சேர்க்கபடுவதாக அறிவித்துள்ளது. அத்துடன், அவசர அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் கூறியுள்ளது.