வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 அக்டோபர் 2021 (14:42 IST)

ஒன்பது நாட்களுக்கு மட்டும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுமா?

நவராத்திரி திருவிழா 9 நாட்கள் நடைபெறுவதை அடுத்து இந்த ஒன்பது நாட்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
 
இந்துக்களின் புனிதமான பண்டிகைகளில் ஒன்று நவராத்தி என்பதும் இந்த பண்டிகையை தசரா என்ற பெயரில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாடு முழுவதும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆங்காங்கே கோவில்களுக்கு பயணம் செய்ய வேண்டி இருப்பதால் அதிக அளவு பெட்ரோல் மற்றும் டீசல் செலவு ஆகும் என்றும் இதனை காரணம் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நவராத்திரி திருவிழா நடக்கும் 9 நாட்களுக்கு குறைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது 
 
இந்த வேண்டுகோளை பாஜக அரசு பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் பெட்ரோல், டீசல் விலையை 9 நாட்களுக்கு மட்டும் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளாது என்றே கூறப்படுகிறது.