எதிர்கட்சிகள் அமளி; ஒரு நாளுக்கு முன்பே முடிவடைந்த குளிர்கால கூட்டத்தொடர்!
லக்கிம்பூர் விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் அமளி செய்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வந்த நிலையில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பெரிதும் எதிர்பார்த்த வேளாண் சட்டங்கள் இந்த கூட்டத்தொடரில் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்கியது முதலாக 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் மற்றும் லக்கிம்பூர் விவகாரம் குறித்து தொடர்ந்து எதிர்கட்சிகள் அமளி செய்து வருகின்றன.
இந்நிலையில் நாளையுடன் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதை தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவை இரண்டும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் நாளை முடிவடைய இருந்த குளிர்கால கூட்டத்தொடர் இன்றே முடிவடைந்துள்ளது.