1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (11:36 IST)

மணிப்பூர் விவகாரம்: 8வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

மணிப்பூர் விவகாரம் காரணமாக கடந்த ஏழு நாட்களாக பாராளுமன்றம் முடங்கிய நிலையில் இன்று எட்டாவது நாளாகவும் பாராளுமன்றம் முடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கடந்த சில நாட்களாக அமளி செய்து வருகின்றனர். 
இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடர்ந்து முடங்கிய நிலையில்  இன்றும் மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதேபோல் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அமலையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முடங்கியுள்ளதால் பாராளுமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva