1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (10:18 IST)

மணிப்பூர் செல்கிறது I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் குழு: கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு..!

I.N.D.I.A  கூட்டணி எம்பிகள் மணிப்பூர் செல்ல இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்தி வெளியான நிலையில் இன்று கூட்டணியின் 20 எம்பிக்கள் மணிப்பூர் செல்வதற்கு கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் விரைவில் நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது
 
இந்த நிலையில் மணிப்பூர் மக்களை சந்திக்கும் வகையில் I.N.D.I.A கூட்டணி எம்பிகள் இன்று காலை மணிப்பூர் புறப்பட்டு சென்றனர்.  இந்த குழுவில் கனிமொழி திருமாவளவன் மற்றும்  காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகோய், பூலோ தேவி நீத்தம், கே.சுரேஷ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மியின் சுஷில் குப்தா, சிவ சேனாவின் அரவிந்த் சாவந்த், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங், அனீல் பிரசாத் ஹெக்டே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஏ ரஹிம், ஆர்ஜேடியின் ஜாவேத் அலி கான், சமாஜ்வாடி கட்சியின் மஹுவா மாஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிபி முகமது ஃபைசல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடி முகமது பஷீர், விசிக ரவிக்குமார், ஆர்எஸ்பி என்கே பிரேமசந்திரன், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
 
இவர்கள் மணிப்பூர் சென்று அங்கு கலவரத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து இரு தரப்பு மக்களிடையே சமாதானம் ஏற்படுத்த முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran