செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (14:41 IST)

விற்பனையில் சரிவை சந்திக்கும் பிஸ்கட் நிறுவனங்கள்: பார்லே ஜி-யின் அதிர்ச்சி முடிவு

ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்களை தொடர்ந்து பிஸ்கட் நிறுவனங்களும் தொடர் சரிவை சந்தித்து வருவதால் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா தற்போது வலுவான சிக்கலை சந்தித்து வருகிறது. ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சி விலைவாசியில் பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் அஞ்சுகிறார்கள்.

தற்போது ஆட்டோ நிறுவனங்களுக்கு அடுத்ததாக பிஸ்கட் கம்பெனிகளும் தங்கள் வேலையாட்களை குறைக்கும் தீர்மானத்திற்கு வந்துள்ளன. இந்தியாவின் பிரபல பிஸ்கெட் நிறுவனமான பார்லே 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

புதிதாக விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியால் 12 சதவீதம் இருந்த வரி 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதன் பிரதிபலிப்பு உணவு பொருட்களின் விற்பனையிலுமே எதிரொலிக்கிறது.

ஜி.எஸ்.டி அதிகரிப்பால் பிஸ்கட்டுகளின் விலையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இதனால் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க தயங்குகிறார்கள். முக்கியமாக கிராமங்களில் விற்பனை பலத்த அடி வாங்கியுள்ளது என பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட இதே கருத்தையே பிரபல பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியாவும் தெரிவித்துள்ளது. இந்த மந்தநிலை வீழ்ச்சி பிஸ்கட் கம்பெனிகளை மட்டுமல்ல. அனைத்து உணவுபொருள் தயாரிக்கும் நிறுவனங்களையுமே பாதிக்க உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.