Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கம்யூனிஸ்டுகளை கண்டித்து நாடு முழுவதும் பாஜக பாத யாத்திரை; அமித் ஷா அதிரடி


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (20:45 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் வன்முறையை கண்டித்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநில தலைநகரங்களில் பாஜகவினர் யாத்திரை நடத்துவார்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 

 
தென்னிந்தியாவில் பாஜகவை நிலைநிறுத்த அமித் ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக கேரளாவில் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மக்கள் யாத்திரை என்ற பெயரில் 15 நாட்கள் பிரச்சார யாத்திரையை நடத்த பாஜக முடிவு செய்தது. 
 
இந்த யாத்திரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இன்று தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். 
 
அப்போது அவர் பேசியதாவது:-
 
இடதுசாரிகள் ஆட்சி நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் வன்முறைகள் நடந்துள்ளது வரலாற்றில் பதிவாகியுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் நடத்திவரும் வன்முறைகளை கண்டித்து நாளை முதல் 15ஆம் தேதிவரை குஜராத்தில் இருந்து அசாம் வரை மற்றும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாஜகவினர் யாத்திரை நடத்துவார்கள்.
 
அனைத்து மாநில தலைநகரங்களிலும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை நோக்கி பாஜகவினர் பாத யாத்திரை செல்வார்கள் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :