வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (13:07 IST)

ஐ என் எக்ஸ் வழக்கில் மீண்டும் ஜாமீன் மனு கோரிய ப சிதம்பரம்..

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம்.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப சிதம்பரம் தற்போது ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 நால் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தற்கு எதிராக ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதற்கு முன் உச்சநீதிமன்றத்தில் ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் ஜாமீன் மனு மறுக்கப்பட்ட நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.